News March 5, 2026

எல்லா புகழும் விஜயகாந்துக்கே: பிரேமலதா

image

ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக சார்பில் சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, நீண்ட நாள் கனவு நிறைவேறும்போது ஏற்படும் மகிழ்ச்சி தற்போது கிடைத்துள்ளது. எல்லா புகழும் விஜயகாந்துக்குதான் என உருக்கமாக கூறினார். அத்துடன் விஜயகாந்த் தான் தெய்வமாக இருந்து தங்களை வழிநடத்தி வருகிறார் என்றும், தேமுதிகவின் ஒவ்வொரு வெற்றியும் அவருக்கு தான் சேரும் எனவும் தெரிவித்தார்.

Similar News

News April 10, 2026

10, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் புதிய உத்தரவு!

image

தமிழகத்தில் 10,12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேர்வுத்துறை இயக்குநரகம் ஒரு முக்கிய அறிவுறுத்தலை மதிப்பீட்டு ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி முழு மதிப்​பெண் (‘சென்​டம்’) பெறும் மாணவர்​களின் விடைத்​தாள்​களை கவன​மாக ஆய்வு செய்து ஒப்புதல் வழங்க வேண்டும் என சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2026

காட்பாடியில் போராடுகிறாரா துரைமுருகன்?

image

2021-ல் காட்பாடியில் திமுகவின் துரைமுருகன், அதிமுகவின் ராமுவை விட 746 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றியை தக்க வைத்தார். இத்தொகுதியில் பெரும்பான்மை சமூகமான வன்னியர்கள், 10.5% இட ஒதுக்கீடு உரிமை குறித்து துரைமுருகன் ஒருமுறை கூட ஆதரித்து பேசவில்லை என வருத்தத்தில் இருக்கிறார்களாம். இளம் வாக்காளர்களும் விஜய், சீமான் பக்கம் சாய்வதால், இம்முறை துரைமுருகன் கடுமையாக போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.

News April 10, 2026

தர்பூசணி விலை மளமளவென குறைந்தது

image

தமிழகத்தில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இதற்கு இதமாக தர்பூசணி, இளநீர், வெள்ளரி ஆகியவற்றை மக்கள் நாடுகின்றனர். அதற்கேற்றார்போல் தர்பூசணி வரத்தும் சந்தைகளில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் 1 கிலோ தர்பூசணி ₹12 – ₹15 வரை விற்பனையாகிறது. சில்லறை கடைகளில் 1 கிலோ ₹20 – ₹25 வரையே விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தர்பூசணி ஜூஸும் ₹20-க்கே சில இடங்களில் கிடைக்கிறது.

error: Content is protected !!