News May 24, 2024
எல்கேஜியில் 15,619 காலி இடங்கள்!

கோவை மாவட்டத்தில் 328 தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு 15 ஆயிரத்து 619 இடங்கள் உள்ளன.
இதில், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் கல்வி பயில 3,950 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் சேர இதுவரை 7,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்று பள்ளிக் கல்வி அதிகாரிகள் இன்று(மே 24) தெரிவித்தனர்.
Similar News
News August 21, 2025
கோவையில் தொழுநோய் உஷார் மக்களே!

கோயம்புத்தூரில் புதிதாக 12 பேருக்கு தொழுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொழுநோய் மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா மூலம் பரவுகிறது. இந்த நோய் தோல் மற்றும் நரம்புகளை பாதிக்கிறது. இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் நோய் பரவுதல் மற்றும் உடல் ஊனம் ஏற்படுவதை தடுக்க முடியும்.இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
News August 20, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட்.20) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
News August 20, 2025
கோவை மாநகர காவல் துறை முதலிடம்!

கோவை மாநகரில் ‘பீட்’களின் எண்ணிக்கையை அதிகரித்து ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டதால், அவசர அழைப்பு தகவலை பெற்ற 11.35 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இது திருப்பூரில் 13 நிமிடங்கள், சென்னையில் 17 நிமிடங்கள், சேலத்தில் 21 நிமிடங்கள், நாமக்கல்லில் 24 நிமிடங்கள் என உள்ள நிலையில், கோவை தமிழகத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது.