News February 4, 2025
எலக்ட்ரீசியன் மர்மமான முறையில் உயிரிழப்பு

ஓசூர் அருகே சானசந்திரம் வ. உ. சி நகரை சேர்ந்த மனோகர் (25) எலக்ட்ரீசியன், நேற்று மாலை ஓசூர் கசவு கட்டா பகுதி மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே, தலையில் பலத்த காயத்துடன் இறந்துகிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 17, 2025
கிருஷ்ணகிரி: 10th போதும் அரசு வேலை! இன்றே கடைசி

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 17, 2025
கிருஷ்ணகிரி: டாடாவில் வேலை செய்ய சூப்பர் வாய்ப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 50 Assembly Line Operator பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் டிகிரி முடித்த 21-25 வயது உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவையில்லை. மாதம் ரூ.15,000- 25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் செ.30ஆம் தேதிக்குள் <
News August 17, 2025
கிருஷ்ணகிரி மக்களே கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க…

கிருஷ்ணகிரி காவல்துறை பொதுமக்களுக்கு மற்றவர்கள் உங்கள் செல்போனை ஹேக் செய்வதில் இருந்து பாதுகாக்க சில டிப்ஸ் வழங்கியுள்ளது. ▶️ ஆப் ஸ்டோரிலிருந்து மட்டும் ஆப்ஸைப் பதிவிறக்கவும் ▶️பொது வைஃபையைப் பயன்படுத்த வேண்டாம் ▶️passwords-யை மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டாம் ▶️ உங்கள் ஆப்ஸைப்பை எப்போது அப்டேட்டில் வைத்திருங்கள். மேலும் புகாரளிக்க <