News March 30, 2025

எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் 15 பேர் காயம்

image

பென்னாத்தூர் அடுத்த கேசவபுரம் கிராமத்தில், நேற்று (மார்.29) எருது விடும் விழா கோலாகலமாக நடந்தது. 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகள், மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து ஓடின. இலக்கை குறைந்த வேகத்தில் கடந்த காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. காளை விடும் விழாவில், மாடுகள் முட்டியதில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.

Similar News

News January 31, 2026

வேலூர்: கரண்ட் கட்? Whatsapp-ல் எளிய தீர்வு!

image

வேலூர் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 31, 2026

வேலூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கொடூரன்!

image

இ.பி.கூட்ரோட்டில் சரவணவேல் என்பவரது உணவகத்தில் தேவேந்திரன் மற்றும் அரவிந்த் என்பவர்கள் சாப்பிட வந்தனர். அப்போது இவர்களுடன் ஏற்பட்ட தகராறில் சரவணவேல் கொதிக்கும் எண்ணெயை அரவிந்த் மீது ஊற்றி உள்ளார். இதனால் வலியால் துடித்த அரவிந்த், திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நேற்று (ஜன.30) குண்டர் சட்டத்தில் சரவணவேலை சிறையில் அடைத்தனர்.

News January 31, 2026

வேலூர் மாவட்ட காவலர்களுக்கு பாராட்டு விழா!

image

வேலூர் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான பாராட்டும் விழா நேற்று (ஜன.30) நடைபெற்றது. இவ்விழாவில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் சேவையில் சிறந்து விளங்கிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!