News March 26, 2026

எரிவாயு நெருக்கடி.. அர்ஜென்டினாவின் ஆதரவு

image

மேற்கு ஆசியப் போரினால் இந்தியாவில் ஏற்பட்ட LPG பற்றாக்குறையை ஈடுசெய்ய அர்ஜென்டினா முன்வந்துள்ளது. 2026-ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில், இந்தியாவுக்கு 50,000 டன் எரிவாயுவை அனுப்பியுள்ளது. இது கடந்தாண்டு ஏற்றுமதியின் மொத்த அளவை விட 2 மடங்குக்கும் அதிகமாகும். சுமார் 20,000 கி.மீ. பயணம், அதிக போக்குவரத்து செலவுகள் இருந்தும், இந்தியாவின் எரிசக்தி தேவைக்கான தனது பங்களிப்பை அர்ஜென்டினா அதிகரித்துள்ளது.

Similar News

News April 13, 2026

திமுக பொய் பிரசாரம் செய்கிறது: அண்ணாமலை

image

திமுக SM-ல் பொய் பிரசாரம் செய்வதாக சாடிய அண்ணாமலை, அளவுக்கு அதிகமான விளம்பரம் முகச்சுளிப்பையே ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார். அளவுக்கதிகமான விளம்பரம் செய்தால் தோல்வியில்தான் முடியும் என்பதை திரைப்படங்கள் மட்டுமல்ல, இதற்குமுன் நடந்த பல தேர்தல்களும் உணர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

News April 13, 2026

USA-வுக்கு பெரிய பாடம் கற்பிப்போம்: ஈரான்

image

USA உடனான பேச்சுவார்த்தையில் ஈரான் மிக சிறந்த முயற்சிகளை மேற்கொண்டதாக சபாநாயகர் முகமது கலிபாஃப் கூறியுள்ளார். இது பேச்சுவார்த்தையில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்ததாக கூறிய அவர், ஆனால் USA தர்க்கரீதியாக பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தால் நாங்களும் ஒத்துழைப்போம் இல்லை சண்டைதான் வழி என்றால் அதற்கும் தயார் என்றார். மேலும், தங்களின் மன உறுதியை சோதித்தால் பெரிய பாடம் கற்பிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

News April 13, 2026

மக்கள் செய்த தவறால் 15 ஆண்டுகளாக கத்துறேன்: சீமான்

image

ஓட்டுக்கு காசு கொடுக்கும்போது, ஜனநாயகம் செத்து பணநாயகம் வெல்வதாக ஆண்டிப்பட்டி பிரசாரத்தில் சீமான் கூறியுள்ளார். தேர்தலில் முதலீடு செய்பவர்கள், பல மடங்கு லாபத்தை எடுக்கத்தான் நினைப்பார்கள் என்ற அவர், எத்தனை காலத்திற்கு திமுகவுக்கும் அதிமுகவுக்கு ஓட்டு போடுவீர்கள் என கேட்டார். மேலும், மக்கள் செய்த தவறால் 15 ஆண்டுகளாக கத்திக் கொண்டிருப்பதாகவும், மீண்டும் அந்த தவறை செய்யாதீர் என்றும் பேசினார்.

error: Content is protected !!