News July 25, 2024
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன மேலாளர்கள், முகவர்கள், விநியோகஸ்தர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் குறைதீர் கூட்டம் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 30ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வு பயனாளர்கள் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை மனு கொடுத்து பயன்பெறலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப். 9) இரவு ரோந்துப் பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் தங்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
நாமக்கல்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

நாமக்கல் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 9, 2025
நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய்!

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதில், வரும் டிசம்பர் 13 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் பிரச்சார நிகழ்விற்கு தற்போது காவல்துறையிடம் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.