News June 26, 2024
எரிவாயு நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வரும் ஜூன் 28 ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
தூத்துக்குடியில் சகோதரர்களுக்கு இரட்டை ஆயுள்

மளவர்நத்தத்தை சேர்ந்தவர் பொன இசக்கி. இவர் இவரது மனைவியை 2013-ல் வெட்டி கொலை செய்தார். இதற்கு பழிக்கு பலியாக கடந்த 2014-ல் பொன் இசக்கி மனைவியின் சகோதரர்களான கால்வாயை சேர்ந்த முருகன், சங்கரன் சேர்ந்து பொன் இசக்கி, அவரது தந்தை நங்கமுத்துவை வெட்டி கொலை செய்தனர். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் முருகன், சங்கரனுக்கு இரட்டை ஆயுள் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
News March 7, 2026
தூத்துக்குடி இளைஞர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆதித் தமிழர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு தொழில் ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பயிற் பெற விரும்பும் இளைஞர்கள் தாட்கோ இணையதளம் முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
தூத்துக்குடி: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

தூத்துக்குடி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!


