News February 25, 2026
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

பிப்ரவரி மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் பிப்.27 அன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்குகிறார். எரிவாயு நுகர்வோர் உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கள், காலதாமதம் போன்றவை குறித்து நேரில் புகார் அளித்து பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் துரை தெரிவித்துள்ளார்.
Similar News
News February 26, 2026
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு சான்றிதழ்

சென்னை தலைமைச் செயலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயல்பட்ட திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு சான்றிதழை முதலமைச்சரிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் பெற்றுக்கொண்டார்.
News February 26, 2026
நெல்லை: சிலிண்டர் வாங்குவோருக்கு HAPPY நியூஸ்…!

நெல்லை மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News February 26, 2026
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

நெல்லை மாவட்டத்தை சுற்றியுள்ள அணைகளின் நீர்மட்ட விபரங்கள் மற்றும் நீர் இருப்பு நிலை பாபநாசம் அணை 143/88.80 சேர்வலாறு அணை 156/86.68 மணிமுத்தாறு அணை 118/91.50 வடக்கு பச்சையாறு அணை 49.20/6.00 நம்பியார் அணை 22.96/14.00 கொடுமுடி ஆறு அணை 52.50/7.00 மணிமுத்தாறு சேர்வலாறு பகுதிகளில் மட்டும் மழை பொழிவு உள்ளதால் நீர் மற்றும் சற்று உயர்ந்துள்ளது.


