News June 15, 2024
எரியாத மின் விளக்குகள் – கோரிக்கை

மேல்செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இப்பகுதியில் விபத்துகள் நடைபெறுவதால் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு 1 மாதத்திற்கு மேலாகியும் மின்விளக்கு எரிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News August 21, 2025
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வம் தி.மலை மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலராகவும், அங்கு பணியாற்றிய சிராஜ் பாபு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுவாரியம் துணை ஆட்சியராகவும், நீலகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சதீஷ்குமார், திருவண்ணாமலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
News August 21, 2025
தி.மலை: தாசில்தார்,VAO லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-22321090 (அ) திருவண்ணாமலை மாவட்ட அலுவகத்தை (04175-232619) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். *லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க*
News August 21, 2025
செம்மறி ஆடு ,வெள்ள ஆடு வளர்ப்பு பயிற்சி முகாம்

திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மையத்தில் நாளை (22ம் தேதி) செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடக்கிறது. கட்டணம் ரூ.500 + 18% ஜிஎஸ்டி உண்டு . கலந்து கொள்வோருக்கு உணவு, சிற்றுண்டி, சான்றிதழ், புத்தகம் வழங்கப்படும். முன்பதிவு இன்று (21ம் தேதி) மாலைக்குள் அவசியம். தொடர்புக்கு: 04175-298258, 95514-19375.