News August 12, 2024
எம்.பி ராசாவிடம் வாழ்த்து பெற்ற திமுக மாவட்ட பொறுப்பாளர்

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று வேலூர் கிராமத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் எம்.பி.ராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது எம்.எல்.ஏ பிரபாகரன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் துரைசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News March 4, 2026
பெரம்பலூர் ஊர் காவல் படைக்கு 19 பேர் தேர்வு

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கான பயிற்சிகள் முடிவடைந்ததை முன்னிட்டு நேற்று பயிற்சி நிறைவு விழா மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட எஸ்.பி அனிதா தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் ஊர்க்காவல் படைக்கு 16 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 19 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
பெரம்பலூர்: புதிய திறன் மேம்பாடு மையம் திறப்பு!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்கும் வகையில் மாநிலம் முழுவதும் “திறனகம்” எனும் சிறப்பு மையங்களை திறந்து வைத்தார். இதில் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.
News March 4, 2026
பெரம்பலூர்: திறனகம் எனும் சிறப்பு மையம் திறப்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்கும் வகையில் மாநிலம் முழுவதும் “திறனகம்” எனும் சிறப்பு மையங்களை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.


