News September 30, 2024
எம்.பிக்களை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஆர்.ராஜேந்திரன், சென்னையில் தி.மு.க.வின் மூத்த தலைவர்களும், எம்.பிக்களுமான டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதேபோல், அமைச்சர் கே.என்.நேருவையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி, தி.மு.க.வின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News August 25, 2025
இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு நேரில் ஆதரவு

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நேற்று மாலை சென்னையில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி நேரில் ஆதரவு தெரிவித்தார்.
News August 25, 2025
சேலம்: SBI வங்கியில் 5,180 பணியிடங்கள்!

எஸ்பிஐ வங்கியில் 5180 Clerk Junior Associates மற்றும் Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி போதும், சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும்.இதற்கான தேர்வு சேலத்தில் நடைபெறும்.விண்ணபிக்க <
News August 25, 2025
விதிமீறிய 508 பேரின் டிரைவிங் லைசன்ஸ் ரத்து

சேலம் தர்மபுரியில் கடந்த 7 மாதத்தில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 508 பேர் லைசன்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சேலம் தர்மபுரியில் விதிமுறைகளை மீறி வாகனம் இயக்குவோர் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தியவர்கள் என 508 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துறை அதிகாரிகள் தகவல்!