News March 20, 2024

எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

image

வாடிப்பட்டி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 23 ஊராட்சி மன்ற பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தாதம்பட்டி, ஒட்டான் குளக்கரையில் உள்ள சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் அறைகள் நேற்று மாலை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Similar News

News September 18, 2025

மதுரையிலே பணி நியமனம் ரூ.25,000 சம்பளம்

image

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மருந்தக உதவியாளர் பணி காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக் செய்து<<>> இந்த மாதம் செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News September 18, 2025

மதுரை அருகே மின்னல் தாக்கி மாணவர் பலி

image

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா காளப்பன்பட்டி ராஜ்குமார் மகன் கவுதம் 18. இவர் கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மாலை கல்லூரி விட்டு வீடு திரும்புவதற்காக காளப்பன்பட்டி அருகே டூவீலரில் இவரது நண்பர் அருண்பாண்டியுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி கவுதம் இறந்தார். அருண் பாண்டி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

News September 18, 2025

மதுரையில் இங்கெல்லாம் மின்தடை

image

மதுரையில் வளையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை,பாரபத்தி, சோளாங்கூரணி, நல்லூர்,குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வளையப்பட்டி, ம ஒ.ஆலங்குளம், கொம்பாடி, உசிலம்பட்டி, வாலாந்தூர், நாட்டார்மங்கலம், தும்மக்குண்டு, சேடப்பட்டி, காலப்பன்பட்டி, பூசலாபுரம், தங்கலாச்சேரி, அழகுரெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!