News June 5, 2024
எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற துரை வைகோ

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட சோமரசன்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டியை திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் ஆக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ இன்று நேரில் சந்தித்தார். மேலும் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நன்றி செலுத்தி எம்எல்ஏவிடம் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார்.
Similar News
News March 5, 2026
திருச்சி வரும் மோடி; ஏற்பாடுகள் தீவிரம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்திருச்சியில் வரும் 11ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்நிலையில் பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையம் அருகே பந்தல்கால் நட்டு மாநாட்டுக்கான இடத்தை தயாா்படுத்தும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. இந்நிகழ்வில் மத்திய அமைச்சா் எல். முருகன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.
News March 5, 2026
திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஓலையூர் பகுதியை சேர்ந்த பெண் தனது 3 வயது பெண் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குசென்றபோது, ஆரோக்கிய சவரிராஜ்(39) என்பவர் பெண்குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதையடுத்து ஆரோக்கிய சவரிராஜ் கைது செய்யப்பட்டு, திருச்சி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றதில், குற்றம் உறுதிசெய்யப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
News March 4, 2026
துவாக்குடியில் 216 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

துவாக்குடி பூசாரி தெரு மளிகை கடையில் போலீசார் நடத்திய சோதனையில் கடை உரிமையாளர் ஜெகதீஸ்வரனிடம் இருந்து 7.8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையெடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், வயலூர் அம்மையப்பன் நகரை சேர்ந்த ஜமால் முகமது என்பவரின் வீட்டில், நடத்திய சோதனையில் 208.5 கிலோ குட்காபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


