News February 27, 2026
எப்ஸ்டீன் ஃபைல்ஸில் சர்ச்சைக்குரிய PHOTO

அனுதினமும் Epstein files வெளியாகும் தகவல்களும், போட்டோக்களும் உலகையே உலுக்கிவருகின்றன. இந்நிலையில், புகழ்பெற்ற விஞ்ஞானியான மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் போட்டோஸ் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளன. அந்த போட்டோவில் ஒரு தனித்தீவில் பிகினி அணிந்த 2 பெண்களுடன் இருக்கிறார் ஹாக்கிங். இந்த போட்டோ வைரலான நிலையில், அந்த பெண்கள் ஹாக்கிங்கின் பராமரிப்பாளர்கள் என அவரது குடும்பம் விளக்கமளித்துள்ளது.
Similar News
News March 28, 2026
₹2.38 லட்சம் கோடிக்கு ஆயுதம்: மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த ராஜ்நாத் சிங் தலைமையிலான DAC, ₹2.38 லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதில் போக்குவரத்து விமானங்கள், S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, டிரோன்கள், டாங்கி எதிர்ப்பு அமைப்புகள், தொலைவிலிருந்து இயக்கப்படும் தாக்குதல் விமானங்கள், தனுஷ் துப்பாக்கி அமைப்பு மற்றும் வான்வழி கண்காணிப்பு அமைப்பு ஆகியவை அடங்கும்.
News March 28, 2026
Otrovert.. இது தெரியுமா உங்களுக்கு?

Otrovert என்பது Introvert-க்கும், Extrovert-க்கும் நடுவில் இருக்கும் ஒரு தனிப்பட்ட மனநிலை. இவர்கள் அனைவருடனும் இயல்பாக பழகினாலும், உள்ளுக்குள் தனிமையாகவே உணர்வார்கள். பேசும் திறன் இருந்தாலும், எல்லோருடனும் நெருக்கமாக பழக விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு அமைதியான சூழல் மிகவும் முக்கியம். இது ஒரு குறை அல்ல; மாறாக, தனித்துவமான ஒரு குணம் என்று அமெரிக்க மனநல மருத்துவர் ராமி கமின்ஸ்கி கூறுகிறார்.
News March 28, 2026
எந்த பிரச்னையும் இருக்காது.. அரசை நம்புங்கள்: அமித் ஷா

நாட்டில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றும், எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். வதந்திகளை நம்பி மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், அரசை நம்புமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தியா எந்த போரிலும் தலையிட விரும்பவில்லை; அதே நேரத்தில், இந்த நெருக்கடியின் சுமையை மற்ற நாடுகள் போல அல்லாமல், இந்தியா தன் மீது ஏற்றுக்கொண்டுள்ளது என்றார்.


