News March 13, 2025

எப்போதும் வென்றான் ஊர் பெயர் காரணம் தெரியுமா?

image

ஒரு சிலிர்க்க வைக்கும் ஊர் பெயர் தான் எப்போதும் வென்றான். சுமார் 700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராஜகம்பள சமூகத்தை சேர்ந்த சோலையப்பன் பாண்டிய மன்னர்களின் போர் வெற்றிக்கு உதவினார். அதனால் பாண்டிய மன்னர் அவரை எப்போதும் வென்றான் சோலையப்பன் என அழைத்தார். அதுவே எப்போதும் வென்றான் என ஊர் பெயராகியது. போர் ஒன்றில் சோலையப்பன் இறந்துவிடவே ராஜகம்பள சமூகத்தினர் அவருக்கு கோவில் கட்டி வழிபடுகின்றனர். ஷேர் it

Similar News

News March 4, 2026

அமைச்சரின் சொத்து குறிப்பு வழக்கு ஓத்திவைப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது வழக்கினை மார்ச்.7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News March 3, 2026

தூத்துக்குடி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

தபால் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News March 3, 2026

தூத்துக்குடி: எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

image

மதுரை, புதுச்சேரி ,காரைக்கால் உள்ளிட்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்(எய்ம்ஸ்) நிரப்பப்பட உள்ள 2,551 செவிலியர் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் முடித்த 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.9,300 – 34,800 வழங்கப்படும் நிலையில் இது குறித்த முழு விவரங்களை<> இங்கே கிளிக் <<>>செய்து தெரிந்துகொள்ளலாம்.

error: Content is protected !!