News January 7, 2026

எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அன்பில் மகேஸ்

image

TN மாணவர்களுக்கு என்ன தேவை என்பது TN அரசுக்கு தான் தெரியும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் TN-ல் தான் மாநில கல்விக் கொள்கை (TNSEP) உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டெல்லியில் இருந்துகொண்டு உத்தரவு போட்டால், எப்படி நம் பிள்ளைகள் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதற்காகவே TNSEP என்றும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News February 7, 2026

விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வெற்றி: PM

image

உலகக்கோப்பையை வென்றுள்ள U 19 அணி குறித்து பெருமை கொள்வதாக PM மோடி தெரிவித்துள்ளார். இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ள அவர், இந்த வெற்றி பல இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் CM ஸ்டாலின், EPS உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

News February 7, 2026

காங்கிரஸ் இருந்தால் அது மதச்சார்பற்ற கூட்டணி: கார்த்தி

image

தமிழகத்தில் 1967-க்கு பிறகு தனித்து நின்று வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரவீன் சக்கரவர்த்தி கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், காங்கிரஸ் இருந்தால்தான் அது மதச்சார்பற்ற கூட்டணி; காங்கிரஸ் கட்சியை வெறும் கூட்டலாக மட்டும் பார்க்காமல், பெருக்கலாக பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News February 7, 2026

ராசி பலன்கள் (07.02.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!