News December 21, 2025

என் மகன் மரத்தில் கட்டி வைத்து எரிக்கப்பட்டான்: தந்தை

image

மகனை எவ்வாறு கொடூரமாக கொன்றனர் என்பதை தந்தையே விவரிப்பது எவ்வளவு பெரிய கொடுமையாக இருக்க முடியும்? பங்களாதேஷில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியை, அவரது தந்தை ரவிலால் தாஸ், முதலில் பேஸ்புக்கிலே பார்த்துள்ளார். அப்போது தான், அவரது மகன் வன்முறையாளர்களால் மரத்தில் கட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் பயங்கரமானது என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 29, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 595 ▶குறள்: வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. ▶பொருள்: தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

News January 29, 2026

அதிமுகவை சீண்டிய ஆதவ் அர்ஜுனா

image

அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தேர்தலில் TVK – DMK இடையேதான் போட்டி என்ற அவர், அதிமுகவை அட்டாக் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என தொண்டர்களை கேட்டுக்கொண்டார். விஜய் சொன்னதுபோல் தவெகவினர் திமுகவை மட்டுமே ஃபோகஸ் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதிமுகவை ஊழல் சக்தி என விஜய் விமர்சித்ததற்கு செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

News January 29, 2026

மாஞ்சோலை தொழிலாளர்கள் 7 நாள்களில் காலி செய்ய உத்தரவு

image

மாஞ்சோலை தேயிலை தோட்ட குடியிருப்புகளை 7 நாள்களுக்குள் காலி செய்ய தோட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாம்பே-பர்மா டிரேடிங் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைவதால், அங்கிருந்து தொழிலாளர்களை வெளியேறுமாறு அந்நிறுவனம் கூறியது. இதற்காக நடைபெற்ற போராட்டங்கள் தோல்வியில் முடிந்த நிலையில், மக்கள் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற தொடங்கினர். இந்நிலையில் முழுவதுமாக காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!