News December 21, 2025
என் மகன் மரத்தில் கட்டி வைத்து எரிக்கப்பட்டான்: தந்தை

மகனை எவ்வாறு கொடூரமாக கொன்றனர் என்பதை தந்தையே விவரிப்பது எவ்வளவு பெரிய கொடுமையாக இருக்க முடியும்? பங்களாதேஷில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியை, அவரது தந்தை ரவிலால் தாஸ், முதலில் பேஸ்புக்கிலே பார்த்துள்ளார். அப்போது தான், அவரது மகன் வன்முறையாளர்களால் மரத்தில் கட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் பயங்கரமானது என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
தோனியால் தான் வெற்றி: அமித் மிஷ்ரா

தோனியால் தனக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனதாக கூறப்படுவதில் உண்மையில்லை என அமித் மிஷ்ரா கூறியுள்ளார். தோனியால்தான் நான் தேசிய அணியில் விளையாடினேன் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, NZ-க்கு எதிரான டெஸ்ட்டில், என்னுடைய வழக்கமான பந்துவீச்சை தோனி விளையாட சொன்னார். அப்படி செய்தபோது 5 விக்கெட்கள் வீழ்ந்தன. அப்போது ‘அதிகம் யோசிக்காதே’ என்று MSD அட்வைஸ் வழங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
News December 23, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி.. முடிவை தெரிவித்தார்

அரசியலில் விஜய் பிழைக்க வேண்டுமென்றால், உழைக்கும் எங்களோடு (NDA) இருக்க வேண்டும் என கூட்டணிக்கு தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார். தனித்து நின்றால் அரசியல் களத்தில் காணாமல் போய்விடுவீர்கள் என்ற அவர், விஜய் இல்லையென்றாலும் ஜெயிப்போம், இருந்தால் கூடுதல் வாக்குகளுடன் ஜெயிப்போம் என தெரிவித்துள்ளார். <<18634397>>தமிழருவி<<>> மணியனும் விஜய்க்கு நேரடி அழைப்பு விடுத்திருந்தார். TVK – NDA கூட்டணி அமையுமா?
News December 23, 2025
ரஞ்சித், மாரியின் வலிகளை ஏற்க வேண்டும்: சரத்குமார்

பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் படங்கள் சாதியை மையப்படுத்தியவை என்ற விமர்சனங்கள் பற்றி சரத்குமார் பேசியுள்ளார். ஏன் இதை காண்பிக்கிறீர்கள் என்று நாம் கேட்பது அபத்தமானது, அது அவர்கள் அனுபவித்த வலி, அதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என தெரிவித்தார். மேலும், அடிமைப்பட்டு இருந்த அவர்களின் வலி இன்னும் அவர்களின் நினைவுகளில் இருந்து அகலவில்லை. எனவே படங்களை படமாக பார்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


