News April 4, 2024
என் மகனுக்கு சீட்டு கேட்டேனா? சபாநாயகர் விளக்கம்

நாங்குநேரி பரப்பாடி அருகே நேற்று (ஏப்ரல் 3) புதிதாக கட்டப்பட்டுள்ள ஆயத்த ஆடைகள் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதன் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளரிடம் சபாநாயகர் கூறும்போது, நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட என் மகனுக்கு சீட்டு கேட்டு தலைமைக்கு நான் அழுத்தம் கொடுத்ததாக வந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என கூறினார்.
Similar News
News February 15, 2026
மாநில அளவில் சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவி

மாநில அளவில் நடைபெற்ற வானவில் மன்றம் போட்டியில் கங்கைகொண்டான் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி மதுமிதா சாதனை படைத்து இன்று தனது சொந்த ஊரான கங்கைகொண்டானுக்கு இல்லம் திரும்பினார். இவ்வாறு சாதனை படைத்து வந்த மாணவி மதுமிதாவை திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு தலைமையில் ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
News February 15, 2026
திருநெல்வேலி போலீஸ் வீட்டில் திருட்டு

கல்லிடைகுறிச்சி பொன்மா நகரை சேர்ந்தவர் ஞானசுந்தர். இவர் விகேபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். கல்லிடைக்குறிச்சியில் உள்ள அவரது பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டிலிருந்த விளக்கு, பித்தளை பொருட்கள், ரூ.4000 ரொக்க பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
News February 15, 2026
திருநெல்வேலி: பஸ் நேரங்களை தெரிஞ்சுக்க – CLICK

நெல்லை பேருந்து நிலையத்தில் 6 நடைமேடைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து நாங்குநேரி, ஏர்வாடி, வள்ளியூர், திசையன்விளை,களக்குடி, ரெட்டியார்பட்டி, கீழப்பிள்ளையார்குளம் உட்பட நெல்லையில் உள்ள பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <


