News January 7, 2026
என் நண்பர் நெதன்யாகு: PM மோடி

இஸ்ரேல் PM நெதன்யாகுவுடன், PM மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது நண்பர் நெதன்யாகுவுக்கும், இஸ்ரேல் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இருநாடுகள் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது பற்றி பேசியதாக கூறிய அவர், பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்த்து போராடுவதை இருநாடுகளும் உறுதிப்படுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News January 8, 2026
ஆண்களை நாய்களுடன் ஒப்பிட்ட நடிகை

நாய்கள் எப்போது கடிக்கும் என்பதை அதன் மனநிலையை பார்த்து அறியமுடியாது என தெருநாய்கள் தொடர்பான வழக்கில் <<18789195>>SC<<>> நேற்று கருத்து தெரிவித்திருந்தது. இதை மேற்கோள் காட்டி, ஒரு ஆணின் மனநிலையையும் நம்மால் அறியமுடியாது என நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார். ஒரு ஆண் எப்போது ரேப் செய்வான், எப்போது கொலை செய்வான் என்பது தெரியாததால், அனைத்து ஆண்களையும் சிறையில் தள்ளலாமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 8, 2026
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஜன.5-ம் தேதி முதல் பணிக்கு வராத ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பில் இருப்பவர்களை தவிர மற்றவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
News January 8, 2026
₹26.30 கோடிக்கு சொகுசு ஃபிளாட் வாங்கிய ரோஹித் மனைவி

ரோஹித் மனைவி ரித்திகா, மும்பையின் பிரபாதேவி பகுதியில் ₹26.30 கோடிக்கு சொகுசு ஃபிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். ஆடம்பரமான அஹுஜா டவர்ஸில் 2,790 சதுர அடியில், 3 கார் பார்க்கிங் வசதியுடன் அந்த ஃபிளாட் அமைந்துள்ளது. ரோஹித்தும் அதே கட்டடத்தில் ₹30 கோடி மதிப்புள்ள ஃபிளாட் ஒன்றை வைத்துள்ளார். பிரபாதேவி பகுதி பல முக்கிய வணிக பகுதிகளுக்கு அருகில் உள்ளதால், அங்கு வீடு வாங்குவது பலரது விருப்பமாக இருக்கிறது.


