News March 16, 2026
என்னை ஏமாத்திட்டாங்க.. வேதனையில் குஷ்பு!

அமேசான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை குஷ்பு கோபத்துடன் பதிவிட்டுள்ளார். தாயாருக்காக விலையுயர்ந்த Furniture ஒன்றை ஆர்டர் செய்த நிலையில், டெலிவரியே செய்யாமல் டெலிவரி செய்து விட்டதாக ஏமாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 40 நாள்களாக இது குறித்து கஸ்டம்ர் கேரில் பேசி வருவதாகவும், தற்போது ஒருவர் ‘என்ன ஆக்ஷன் வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க’ என அலட்சியமாக பதிலளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 2, 2026
கேரளாவில் இலவச பஸ் வாக்குறுதி அளித்த UDF

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் *பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம், *கல்லுாரி மாணவிகளுக்கு மாதம் ₹1,000 உதவித்தொகை, *தொழில் முனைவோருக்கு வட்டியில்லா கடன் *முதியோர் ஓய்வூதியம் ₹2,000-ல் இருந்து ₹3,000 ஆக உயர்வு, *ASHA பணியாளர்களுக்கு தின ஊதியம் ₹700 ஆக உயர்வு, *₹25 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 2, 2026
பெரம்பூர் ஸ்டார் தொகுதியா? திலகபாமா பதில்

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனாக யாரும் வரக்கூடாது என நினைக்கும் திமுக அரசு அழித்தொழிக்கப்பட வேண்டும் பெரம்பூர் பாமக வேட்பாளர் திலகபாமா கூறியுள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு பின் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டும், பெரம்பூரை மாற்றவும்தான் இங்கு போட்டியிடுகிறேன் என தெரிவித்துள்ளார். விஜய் குறித்த கேள்விக்கு, மக்களுக்கு எல்லா வசதியும் கிடைத்தால்தான் அது ஸ்டார் தொகுதி எனவும் பேசியுள்ளார்.
News April 2, 2026
‘நான் சாகப் போகிறேன்.. மன்னிச்சிருங்க’

குற்ற உணர்ச்சி ஒரு உயிரை குடித்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பிரதீபா(29) மாடிக்குச் சென்ற நேரத்தில், வீட்டில் இருந்த அவரது 11 மாத குழந்தை வாளித் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. தனது அலட்சியமே குழந்தையின் இறப்புக்கு காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த பிரதீபா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவரிடம் மன்னிப்பு கேட்டு அவர் எழுதிய கடிதத்தை மீட்டு போலீஸ் விசாரித்து வருகிறது.


