News August 7, 2025
என்னென்ன சான்றிதழ்களை பெறலாம்

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச்சான்று, கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு-குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் மற்றும் வேலையில்லாதோர் சான்றிதழ் ஆகியவற்றை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 7, 2025
வேலூர்: பட்டா சிட்டா விபரங்களை அறிய வேண்டுமா?

வேலூர் மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
News August 7, 2025
வேலூர் மாவட்டத்தில் இன்றைய இரவு ரோந்து பணி

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.7) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மாவட்ட காவல் துறை. மேலே குறிப்பிட்டுள்ள எண்களில் தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நேரும்போது அருகே உள்ள காவலரது எண்ணுக்கு தொடர்புக்கொண்டு தெரியபடுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News August 7, 2025
வேலூரில் சைபர் குற்ற வழக்குகளில் ரூ.45.83 லட்சம் மீட்பு

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. மயில்வாகனன் முன்னிலையில், நேற்று (ஆக.06) சைபர் கிரைம் காவல் நிலையத்தில், கடந்த ஜூலை மாதம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 19 வழக்குகளின் தொடர்பாக ரூ.45,83,671 பணம் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை நிகழ்வில் கலந்துகொண்டார்.