News July 11, 2025
எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி – ராமதாஸ் குற்றச்சாட்டு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது வீட்டிற்குள் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் உடனான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், லண்டனில் இருந்து இது வாங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 21, 2025
இரா.லட்சுமணன் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாமகவினர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாமக தொண்டர்கள் சதீஷ் தலைமையில் 25 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், திமுக செய்தி தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.
News September 21, 2025
“தமிழர்களின் வெற்றி சூத்திரம் இதுதான்”

தமிழர்களின் வெற்றி சூத்திரம் ஒன்றே ஒன்றுதான். ஆபத்து வரும்போது எல்லாம் ஒன்றிணைவார்கள், அச்சுறுத்தப்படும் போதெல்லாம் ஒன்று இனைவார்கள், ஒடுக்கப்படும்போது எல்லாம் ஒன்றிணைத்து வீரு கொண்டு எழுவார்கள். இதோ, இப்பொழுது நம் மண், மொழி, மானம், காத்திட தமிழ்நாடு மக்கள் ஓரணியில் திரண்டு போராடி வெல்ல தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரா.லட்சுமணன் உரையாற்றினார்.
News September 21, 2025
விழுப்புரம்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

விழுப்புரம் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <