News December 10, 2025
எந்த ஷா வந்தாலும் முடியாது: மு.க.ஸ்டாலின் சவால்

தேனாம்பேட்டையில் நடந்த ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ பரப்புரை நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார். இதுதொடர்பான புகைப்படங்களை X பக்கத்தில் வெளியிட்ட அவர், ‘எந்த ஷா வந்தாலென்ன, எத்தனை திட்டம் போட்டாலென்ன. டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்கு தக்க பாடம் புகட்டும்’ என்று சூளுரைத்துள்ளார்.
Similar News
News March 5, 2026
திமுக, அதிமுகவை ஒழிக்க வேண்டும்: சீமான்

தன்னைப் போல பணம் கொடுக்காமல் CM ஸ்டாலின், EPS ஆல் ஒரு வாக்கை கூட பெற முடியாது என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்குள் பாஜக வரக்கூடாது என்றால் கச்சத்தீவு போன்ற தீய திட்டங்களுக்கு கையெழுத்திட்ட காங்கிரஸ் வரலாமா என கேள்வி எழுப்பி அவர், சிலர் அக்கட்சியை புனிதப்படுத்துவதாகவும் சாடினார். மேலும் தமிழகத்தில் திமுக, அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
News March 5, 2026
திமுக கூட்டணி.. ஒரே இரவில் மொத்தமாக மாறியது

திமுகவா, தவெகவா என இரட்டை நிலைப்பாட்டுடன் இருந்ததாக கூறப்பட்ட காங்., இறுதியாக நேற்று இரவு திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்தது. இந்நிலையில், இதுவரை 21 கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் என்பதையே <<19299599>>‘Over’ என்ற சைகையில்<<>> ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார் என திமுகவினர் கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News March 5, 2026
வெடிக்காமல் போனது விஜய் வைத்த BOMB

TVK முதல் மாநாட்டில் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு தருவதாக விஜய் கூறியிருந்தார். அதன்பிறகு திமுக, அதிமுகவில் நிலவிய கூட்டணி சலசலப்பை சேலம் கூட்டத்தில் குறிப்பிட்டு, தான் வைத்த BOMB நன்றாக வெடிக்கிறது என விஜய் பேசினார். ஆனால், இதுவரை தவெகவுடன் யாரும் கூட்டணி சேரவில்லை. காங்கிரஸும், திமுக கூட்டணியில் தொடர்வதால் விஜய் வைத்த BOMB வெடிக்கவில்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


