News December 17, 2025

எந்த கேரக்டரில் நடிக்கிறேன் என்பதே தெரியாது: VJS

image

‘அரசன்’ படத்தில் தன்னுடைய கேரக்டர் என்ன, எத்தனை நாள் ஷூட்டிங் என எதுவுமே தனக்கு தெரியாது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இந்த கேரக்டர் எழுதும்போது உங்க ஞாபகம் வருது சேது, எழுதட்டுமா என வெற்றிமாறன் சார் கேட்டார். உங்க ஞாபகத்தில் வருவதே நல்ல விஷயம், எழுதுங்க சார் என ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு எதுவுமே தெரியவில்லை என்றாலும், அனைத்தையும் வெற்றி சார் பார்த்துக்கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News December 20, 2025

FLASH: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

தங்கம், வெள்ளி விலை இந்த வாரத்தில் அதிரடியான மாற்றங்களை சந்தித்துள்ளது. 22 கேரட் தங்கம் முதன்முறையாக 1 சவரன் ₹1 லட்சத்தை கடந்த நிலையில், தற்போது சற்று குறைந்து <<18619763>>₹99,200-க்கு<<>> விற்கப்பட்டு வருகிறது. தொடர் உச்சத்திலேயே நீடிக்கும் வெள்ளி, இந்த வாரத்தில் மட்டும் கிலோவுக்கு ₹16,000 அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் 1 கிராம் வெள்ளி ₹216-க்கும், 1 கிலோ ₹2.16 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News December 20, 2025

உலகக்கோப்பை அணியில் 2 தமிழர்கள்

image

<<18621772>>டி20 உலகக்கோப்பைக்கான<<>> இந்திய அணியில் 2 தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இதே அணிதான் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

News December 20, 2025

சின்ன கால்குலேஷன் மிஸ்டேக்: நயினார்

image

திமுக என்றுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது இல்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். அன்று முதல் இன்று வரை அதிமுக உடைந்ததால்தான் திமுக வெற்றிபெற்றது என்ற அவர், சென்ற தேர்தலிலும் சின்ன கால்குலேஷன் மிஸ்டேக்கால் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டதாக கூறியுள்ளார். அப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது ₹50,000 கோடி வரை கொள்ளையடித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!