News November 3, 2025

எந்த உடல்வலியையும் விரட்டும் கசாயம்!

image

மூட்டு வலி, கழுத்து வலி, தோள்பட்டை, கை, கால் என எந்த வலியையும் சித்தரத்தை கசாயம் விரட்டும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ✦தேவை: சுக்கு பொடி, சித்தரத்தை, சீந்தில் கொடி, பனங்கற்கண்டு ✦செய்முறை: மேலே குறிப்பிட்ட மூன்றையும் 200 மில்லி நீரில் போட்டு, 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். பிறகு, வடிகட்டி ஆறவைத்து தேவைகேற்ப பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்,

Similar News

News November 3, 2025

‘Ra.One’ 2-ம் பாகம் உருவாகும்: ஷாருக்கான்

image

‘Ra.One’ படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய அனுபவ் சின்ஹா 2-ம் பாகம் எடுக்க ஆர்வம் தெரிவித்து, அதற்கான நேரம் கூடி வரும்போது, 2-ம் பாகத்தை எடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், முதல் பாகம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

News November 3, 2025

உலகையே அழிக்க போதுமான அணு ஆயுதம் இருக்கு: டிரம்ப்

image

இந்த உலகத்தையே 150 முறை அழிக்க போதுமான அணு ஆயுதங்கள் USA-விடம் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். USA-வுக்கு அடுத்து அதிக அணு ஆயுதங்களை வைத்திருப்பது ரஷ்யாவும் சீனாவும் தான் என கூறிய அவர், இன்னும் 5 ஆண்டுகளில் தங்களுக்கு இணையான அணு ஆயுதங்களை கொண்ட நாடாக சீனா முன்னேறிவிடும் என கூறியுள்ளார். மேலும், அணு ஆயுதக் குறைப்பு குறித்து ரஷ்யா & சீனாவிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

News November 3, 2025

10-வது போதும்: மத்திய அரசில் ₹44,900 சம்பளத்தில் வேலை!

image

★டாடா நினைவு மையத்தில் உள்ள Female Nurse ‘A’, Stenographer உள்ளிட்ட 330 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ★கல்வித்தகுதி: 10th, Any Degree, GNM, B.Sc.(Nursing) ★வயது: 18- 45 தேர்வுகள்: Written Examination / Skill Test & Interview ★விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 14 ★சம்பளம்: ₹18,000- ₹44,900 ★முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!