News December 6, 2025
எந்த அயோத்தியாக TN மாற வேண்டும்?: கனிமொழி

அயோத்தி போல <<18486296>> தமிழ்நாடு வருவதில் தவறில்லை <<>>என நயினார் தெரிவித்த கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். எந்த அயோத்தி போல TN மாற வேண்டும் என கேட்ட அவர், கடந்த தேர்தலில் RSS – பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா என கேள்வி எழுப்பியுள்ளார். கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 2, 2026
விருதுநகர்: இலவச wifi வேண்டுமா?

விருதுநகர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் ரூ.99 க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <
News April 2, 2026
PF வட்டிவிகிதம் 10% ஆக உயர்கிறதா?

தற்போது PF கணக்கில் இருக்கக்கூடிய பணத்திற்கு 8.25% வட்டியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் அது 10% ஆக உயர்த்தப்படுமா என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே, வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து தொழிலாளர் யூனியன் தரப்பிலிருந்து எந்த ஒரு கோரிக்கையும் இதுவரை வரவில்லை என்றும், அரசிடமும் அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை எனவும் பதிலளித்துள்ளார்.
News April 2, 2026
விஜய் பிரசாரத்தில் பெண்கள் மயக்கம்.. அடுத்த பரபரப்பு

திருச்சி, மரக்கடை பகுதியில் விஜய்யின் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மீட்ட தவெக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக அதே பகுதியில் <<19546610>>ஆதவ் அர்ஜுனாவின் கார்<<>> மோதியதில் காவலர் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டதால் சிறிது நேரம் பதற்றம் உருவானது. காவலர், தற்போது ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளார். <<-se>>#TNElection2026<<>>


