News March 11, 2026
எத்தனை முறை PM வந்தாலும் வெற்றி திமுகவுக்கே: சுதீஷ்

ராஜ்யசபா உறுப்பினராக தேர்வான தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், அறிவாலயத்தில் CM ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கூட்டணியால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்; இது தேமுதிகவினர் விரும்பிய கூட்டணி என்றார். அத்துடன் PM மோடி எத்தனை முறை தமிழகத்துக்கு வந்தாலும், வரும் தேர்தலில் திமுக கூட்டணிதான் அமோக வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 1, 2026
நிலவுக்கு செல்லும் 8 வயது சிறுவனின் பொம்மை

நாசாவின் ஆர்டெமிஸ் II நிலவு பயணத்தில் 4 விண்வெளி வீரர்களுடன் ‘ரைஸ்’ என பெயரிடப்பட்ட ஒரு பொம்மையும் பயணிக்க உள்ளது. 1961-ல் யூரி ககாரின் தொடங்கிய பாரம்பரியத்தைத் தொடரும் விதமாக, விண்வெளி வீரர்கள் ஒரு பொம்மையை எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. அதன்படி, 50 நாடுகளில் இருந்து வந்த 2,600 பொம்மைகளில் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 8 வயது லூகாஸ் என்ற சிறுவன் உருவாக்கிய பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
News April 1, 2026
தங்கம் விலை ₹30,000.. தலைகீழாக மாறுகிறது

மார்ச்சில் தங்கம் விலை சவரனுக்கு ₹16,000 வரை குறைந்தது. ஆனால், இனிமேல் தலைகீழ் மாற்றத்தை காணும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது, 1 கிராம் தங்கம் ₹30,000 வரை செல்லும் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் எச்சரித்துள்ளார். குறுகிய கால முதலீட்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹14,050-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.