News March 9, 2025
எதிரிகளின் தொல்லை நீங்க அருள்புரியும் சரபேஸ்வரர்

கும்பகோணம்,திருபுவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் கோயிலில் மனிதன்,பறவை மிருகம் போன்ற கலவையாக அருள்பாலிக்கும் சரபேஸ்வரரை 11 வாரம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல் பில்லி சூனியத்தால் துன்பப்படுவோர், தீராத நோயுற்றவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு அவர்களின் தலையெழுத்தே மாறும் என்பது ஐதீகம்.Share It
Similar News
News August 30, 2025
புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்!

“புதுச்சேரியில் பல இடங்களில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் சாரம் அவ்வை திடலில் இருந்து ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கும் முக்கிய நிகழ்ச்சி 31-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சில தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.” என புதுச்சேரி போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் ரஞ்சனா சிங் அறிவித்துள்ளார். SHARE IT…
News August 30, 2025
புதுச்சேரி: பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஆணை

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் 10 உதவிப்பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி உயர்வு ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (29.08.2025) வழங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News August 29, 2025
காரைக்கால் காவல்துறை மக்கள் மன்றம் நிகழ்ச்சி ஒத்திவைப்பு

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையின் தொடர்ச்சியான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் காரணமாக, 30/08/2025 சனிக்கிழமை அன்று (நாளை) காரைக்கால் மாவட்ட காவல்துறையின் மக்கள் மன்றம் நிகழ்வுகள் நடைபெறாது எனவும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று காவல்துறை, காரைக்கால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.