News October 1, 2025
எண்ணூர் விபத்து: இபிஎஸ் இரங்கல்

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் நேற்று கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த போது முகப்பு சாரம் சரிந்து 9 பேர் பலியாகினர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். X-ல் பதிவிட்டுள்ள அவர், என்ணூரில் ஏற்படட விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பாத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
Similar News
News March 11, 2026
மதுரவாயலில் பாலியல் சீண்டல்: வாலிபர் கைது!

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 41 வயது பெண், தனது மகன், மகளுடன் மார்ச் 8ம் தேதி மதுரவாயல் டேனியல் தாமஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்தபின், சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி சென்றார். புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையில் சுராஜா பத்ரா (24), நேற்று கைது செய்தனர்.
News March 10, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னையில் இன்று (மார்ச்.10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 10, 2026
சென்னை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!


