News October 1, 2025

எண்ணூர்: பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு

image

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் நேற்று மாலை கட்டுமான பணியின் போது சாரம் சரிந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Similar News

News October 31, 2025

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பெண்களின் சடலம் எண்ணூரில் மீட்பு

image

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சார்ந்த தேவகி(30), தேர் வழியை சேர்ந்த காயத்ரி(18), தேவம்பேட்டை சேர்ந்த பவானி (19), எளாவூரை சேர்ந்த ஷாலினி(18) இன்று மின்சார ரயில் சென்னைக்கு சென்றனர். இந்நிலையில் 4 பேரின் சடலம் சென்னை எண்ணூர் கடற்கரை ஓரத்தில் மீட்கப்பட்டுள்ளது. 4 பேரும் எதனால் இறந்தார் என இதுவரை தெரியாத நிலையில் இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 31, 2025

திருவள்ளூர்: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு..

image

திருவள்ளூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுக

News October 31, 2025

திருவள்ளூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!