News April 24, 2024

எட்டுக்குடி முருகன் கோயில் தேரோட்டம்

image

முருகனின் ஆதிபடை வீடான நாகை மாவட்டம் எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாகை மட்டுமின்றி திருவாரூர் மயிலாடுதுறை காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

Similar News

News January 11, 2026

நாகை: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

நாகை: புதிய ஐடிஐ தொடங்க விண்ணப்பிக்கலாம்

image

நாகை மாவட்டத்தில் 2026 – 2027ம் ஆண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கிகாரம் புதுப்பித்தல், கூடுதல் தொழிற்பிரிவுகள் ஏற்படுத்தல் ஆகியவற்றிற்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகின்ற 28-2-2026க்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04365-250126 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

நாகை அருகே அதிர்ச்சி: 200 கிலோ கஞ்சா பறிமுதல்

image

வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் அருகே புதுப்பள்ளி பாலம் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீசார் வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாக பறிமுதல் செய்தனா். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!