News October 1, 2024
எடப்பாடி மீது தாக்குதல் – ஓபிஎஸ் மகன் கண்டனம்
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மகனும் தேனி முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத் எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் கொண்டு தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு பின்னால் இருந்து வந்தாலும், நம்முடைய மரியாதையும் சீர்திருத்தமும் குறைய கூடாது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
தேனியில் இலவச போட்டோகிராஃபி பயிற்சி
தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் இலவச போட்டோ & வீடியோ கிராஃபி பயிற்சி வருகின்ற டிச.2 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் 30.11.2024 தேதி கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 04546-251578, 9500314193, 9043651202 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *பகிரவும்*
News November 20, 2024
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் முகாம்
தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாம் இரண்டு கட்டமாக 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்தார். பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழைத்திருத்தம், புகைப்பட மாற்றம் போன்ற குறைகள் தெரிவிக்கலாம் என்றார்.
News November 20, 2024
தேனியில் நவ.23ம் தேதி கிராமசபை கூட்டங்கள் – ஆட்சியர்
தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் வருகிற 23ஆம் தேதி நடக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். அன்று நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டமானது, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டமானது அன்று முற்பகல் 11.00 மணியளவில் ஊராட்சி மன்றத்தலைவர்களால் நடத்தப்படுகிறது என்றார்.