News June 24, 2024
எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு

பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஒருங்கிணைப்பு குழு ஈடுபட்டு வருகிறது. இக்குழுவில் புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிச்சாமி உள்ளனர். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த இபிஎஸ், ஒருங்கிணைப்பு குழுவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால், இபிஎஸ் மீது கோவை ஜேஎம்.1 நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
Similar News
News August 15, 2025
கோவை: கடன் தொல்லை நீங்க இங்க போங்க!

கோவை, ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூரில், கால சம்ஹாரீஸ்வர பைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. 8 வாகனங்களில், 8 வகையான கால பைரவர்கள், சம்ஹார பைரவர்களாக இங்கு வீற்றிருக்கின்றனர். சக்திவாய்ந்த கால பைரவரை, அஷ்டமி நாளான நாளை (ஆக.16), 11 தீபங்கள் ஏற்றி, வணங்கினால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News August 15, 2025
பணியாளர்களுக்கு வெகுமதி வழங்கிய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய பணியாளர்களுக்கு ரூ.2000/- வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் , வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.
News August 15, 2025
கோவையில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் (ஆகஸ்ட் 15) நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.