News March 11, 2026

எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அழைப்பு!

image

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர்கள் பரஞ்ஜோதி(வடக்கு), குமார்(தெற்கு), சீனிவாசன்(மாநகர்) ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், பஞ்சப்பூரில் இன்று நடைபெறும் பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரும், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, காலை 9.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில், அதிமுகவினர் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 11, 2026

திருச்சியில் பிரதமர் தொடங்கி வைக்கும் முக்கிய திட்டங்கள்!

image

திருச்சியில் இன்று மாலை நடைபெறும் அரசு விழாவில் ₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ₹3,680 கோடி முதலீட்டில் BPC நிறுவனத்திற்கு அடிக்கல், சென்னை மணலியில் ₹1,490 கோடியில் IOC மசகு எண்ணெய் கலவை ஆலை திறப்பு உள்ளிட்டவைகள் அடங்கும். மேலும், கோவை – தன்பாத் இடையே அம்ரித் பாரத் உள்ளிட்ட 5 புதிய ரயில் சேவைகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.

News March 11, 2026

பொது தேர்வு தொடக்கம் – அமைச்சர் வாழ்த்து

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முதல் பொதுதேர்வை எழுத உள்ளீர்கள். அந்த எக்சைட்மென்ட் இருக்க வேண்டுமே தவிர பயம் இருக்க கூடாது. மற்ற தேர்வுகளை போல இதுவும் ஒரு தேர்வுதான். மகிழ்ச்சியுடன் தேர்வறைக்குள் செல்லுங்கள். ஆல் தி பெஸ்ட் என அவர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருச்சி மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <>இங்கே கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!