News March 30, 2026
எடப்பாடியில் EPS ஜெயிப்பாரா பார்ப்போம்: செங்கோட்டையன்

தமிழ்நாட்டின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமாக விஜய் இருப்பதாக செங்கோட்டையன் பேசியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகதான் வெல்லும் என EPS கூறியதற்கு பதிலளித்த அவர், எடப்பாடி தொகுதியிலேயே EPS-ஆல் வெற்றிப்பெற முடியுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். கோபிசெட்டிபாளையத்தில் 9 முறை வெற்றிபெற்றதை மக்கள் தனக்கு அளித்த மாபெரும் கொடையாக கருதுவதாகவும் அவர் கூறினார்.<<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 4, 2026
நாகை: சிலிண்டர் புக் பண்றீங்களா.. இது முக்கியம்!

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய Aadhar FaceRD செயலி (அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
News April 4, 2026
வெள்ளியை வைத்து கடன் பெறலாம்.. இதை கவனிங்க!

தங்கத்தை போன்று <<19547252>>வெள்ளியையும்<<>> அடமானம் வைத்து கடன் பெறும் திட்டம் ஏப்.1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் சிறப்பம்சமாக, தொகையை பொறுத்து நகைக் கடன் மதிப்பு மாறும். ₹2.5 லட்சம் வரை கடன் பெற, வெள்ளியின் மதிப்பில் 85% வரை பணம் கிடைக்கும். ₹2.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை கடன் பெற, 80% வரையும், அதற்கு மேல் கடன் பெற விரும்பினால் 75% வரையும் என பணம் கிடைக்கும் என RBI புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
News April 4, 2026
CBSE பாடத்திட்டத்தில் இந்தி திணிப்பா? தர்மேந்திர பிரதான்

CBSE பாடத்திட்டத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக<<19561968>> CM ஸ்டாலின் <<>>குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், திணிப்பு என்பது அவரது அரசியல் தோல்விகளை மறைப்பதற்கான ஒரு முயற்சி என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார். புதிய கல்வி கொள்கை தாய்மொழிக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், ஆனால் கட்டாய இந்தி திணிப்பு என்று ஸ்டாலின் தவறாக சித்தரிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.


