News September 23, 2024
எச்.ராஜா மீது வழக்குப் பதிய எஸ்பியிடம் காங்., மனு

நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்., தலைவர் நவீன் மற்றும் காங்கிரசார் எஸ்.பி.யிடம் இன்று மனு கொடுத்தனர். அதில் எச்.ராஜா, ராகுல் காந்தி குறித்து பேசுவது அதிர்ச்சியை தருகிறது. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் எச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.
Similar News
News November 11, 2025
குமரி: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5..கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 11, 2025
குமரி: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தெரிசனங்கோப்பு பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்கள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகே நின்று கொண்டிருந்தபோது ராமசுப்பு (65 ) என்பவர் அவர்களை அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுத்து பின்னர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் ராமசுப்பு மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று முதியவர் ராமசுப்புக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
News November 11, 2025
அஞ்சல் ஊழியர் மூலம் உயிர்வாழ் சான்றிதழ் – அதிகாரி தகவல்

குமரி கோட்டத்தில் தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாக வங்கி மற்றும் இதர சேவைகளை வழங்கி வருகின்றது. எனவே மத்திய அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள்,குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இன்று கூறினார்.


