News February 12, 2026
எச்சரிக்கை: NOTES ஆப்பில் பாஸ்வேர்டு சேமிக்கிறீர்களா?

பலர் தங்களது தனிப்பட்ட பாஸ்வேர்டுகளை மொபைலில் உள்ள ‘NOTES’ ஆப்பில் சேமித்து வைக்கின்றனர். இது பாதுகாப்பானது அல்ல என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மொபைல் ஹேக் செய்யப்பட்டாலோ, கிளவுட் சேமிப்பில் குறைபாடு ஏற்பட்டாலோ, அனைத்து தகவல்களும் எளிதில் கசிந்துவிடலாம். முக்கியமான கணக்குகளுக்கு பிரத்யேக பாஸ்வேர்டை பயன்படுத்துவது பாதுகாப்பானது. உங்கள் தனிப்பட்ட தகவல்கள் உங்கள் பொறுப்பு.
Similar News
News March 2, 2026
மார்ச் 2: வரலாற்றில் இன்று

*1896–தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்தநாள் *1917–லாரி பேக்கர் பிறந்தநாள் *1918–நடிகர் ரஞ்சன் பிறந்தநாள் *1923–நடிகை சுந்தரிபாய் பிறந்தநாள் *1930–உப்பு சத்தியாகிரகத்திற்காக காந்தி, தண்டியை நோக்கி 240 மைல் நடைப்பயணத்தை தொடங்கினார் *1935–குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்தநாள் *1949-சரோஜினி நாயுடு நினைவு நாள் *1963–வித்யாசாகர் பிறந்தநாள் *1968–நடிகர் டேனியல் கிரெய்க் பிறந்தநாள்
News March 2, 2026
தர்மம் VS அதர்மத்திற்கான தேர்தல்: நயினார்

உதயநிதியை CM ஆக்க வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சி நடத்துவதாக நயினார் விமர்சித்துள்ளார். NDA மாநாட்டில் பேசிய அவர், TN-ல் பெண்கள் யாருக்குமே பாதுகாப்பில்லை என்றும், புத்தகம் தூக்க வேண்டிய மாணவர்களின் கையில் கஞ்சா இருப்பதற்கு திமுகவின் மோசமான ஆட்சியே காரணம் எனவும் குற்றஞ்சாட்டினார். மேலும், 2026 தேர்தல் களமானது தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல், இதில் தர்மமே வெல்ல வேண்டும் எனக் கூறினார்.
News March 2, 2026
ஈரானின் கடற்படை தலைமையகம் அழிப்பு: டிரம்ப்

கமேனி கொல்லப்பட்டாலும் ஈரானின் முக்கிய இடங்களில் USA தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் ஆபிரஹாம் லிங்கன் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறிய நிலையில், அந்நாட்டின் 9 கடற்படை கப்பல்களை அழித்துவிட்டதாக SM-ல் டிரம்ப் கூறியுள்ளார். மற்றொரு தாக்குதலில் ஈரானின் கடற்படை தலைமையகம் பெருமளவு தகர்க்கப்பட்டதாகவும், மீதமுள்ள கப்பல்கள் கடலுக்குள் மூழ்கடிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.


