News July 24, 2024
எச்சரிக்கை விடுத்த திருச்சி எஸ்.பி.

பெட்டவாய்த்தலை பகுதியில் ரஜினி என்பவர் மது போதையில் பெட்ரோலை கேனில் வாங்கி, தலையில் ஊற்றிக் கொண்டார். உடனே, அங்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் அவரை தடுத்த போது, காவலர்களை அசிங்கமான வார்த்தைகளால் பேசிய ரஜினி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக வாட்டர் கேனில் பெட்ரோல் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி எஸ்.பி இன்று எச்சரித்துள்ளார்.
Similar News
News April 25, 2025
போப் ஆண்டவர் உடலுக்கு திருச்சி எம்.எல்.ஏ அஞ்சலி

உலக கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 22-ம் தேதி காலமானார். தொடர்ந்து வாடிகனில் நடைபெற்ற இவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் இன்று கலந்து கொண்டு, மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
News April 25, 2025
திருச்சியில் வி.சி.க சார்பில் பேரணி அறிவிப்பு

திருச்சி விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பெற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டுமென விசிக வைத்த கோரிக்கை அரசியலுக்காக அல்ல, அது எங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு. வக்ஃபு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் மே 31 ஆம் தேதி வி.சி.க சார்பில் திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளதாகவும் கூறினார்.
News April 25, 2025
திருச்சி விமான நிலையத்தில் 9.9 கிலோ உயர்தர கஞ்சா பறிமுதல்

பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது, அதில் 9.9 கிலோ ஹைட்ரோபோலிக் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 9 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.