News March 17, 2025
எச்சரிக்கை: வரி செலுத்தாவிட்டால் குடிநீர் நிறுத்தம்!

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்துக்கு நுகர்வோர் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரியையும், குடிநீர் கட்டணங்களையும் வரும் மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. வரியை செலுத்தத் தவறினால் குடிநீர் நிறுத்தம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 17, 2025
தீராத நோய்களை தீர்க்கும் மருந்தீஸ்வரர்

சென்னை திருவான்மியூரில் பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. தீராத நோய்களை தீர்க்கும் சக்தி படைத்தவர் என்பதால், இவருக்கு ‘மருந்தீஸ்வரர்’ என்று பெயர். சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து விபூதி பிரசாதம் உண்டால், தீராத நோய்கள், பாவங்கள் தீரும் அங்குள்ள வன்னி மரத்தை சுற்றி முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News March 17, 2025
ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

சென்னை தாம்பரம் அருகே மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் விஸ்வா (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர், மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவரின் உடலைமீட்ட தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 17, 2025
குடிநீர் கட்டணம் செலுத்த புதிய முறை அறிவிப்பு

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் தற்போது குடிநீர் கட்டணம் செலுத்தும் புதிய முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login வலைதளத்தில் டெபிட் கார்ட் கிரெடிட் கார்ட், நெட் பேங்கிங் மற்றும் UPI மூலமாக பணம் செலுத்தலாம். இந்த அரையாண்டிற்கான உங்கள் வரி மற்றும் கட்டணத்தை செலுத்த கடைசி நாள் 31-03-2025 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது