News October 24, 2024
எச்சரிக்கையாக இருக்க மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகை காலம் என்பதால் கடை தெருக்களில், கூட்ட நெரிசல்களில் செல்லும்பொழுது பொதுமக்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். கூட்டம் மிகுந்த பகுதிகளில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி நெல்லை மாவட்ட காவல்துறை இன்று (அக்.24) கேட்டுக் கொண்டது.
Similar News
News February 9, 2026
நெல்லை: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

நெல்லை வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது நெல்லை மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 0462- 2576265. SHARE பண்ணுங்க!
News February 9, 2026
நெல்லை: போக்சோவில் சிக்கிய போலீஸ்; 20 ஆண்டுகள் சிறை!

நெல்லை, சிதம்பராபுரத்தை சேர்ந்த போலீசார் ஆனந்த கலைச்செல்வன்(32), உறவினரின் மகளான +2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2024 நவ; கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட இவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு நடந்தது. திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.12,000 அபராதம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
News February 9, 2026
நெல்லை: ரயில் மோதி ஒருவர் பலி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகே நேற்று முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த செங்கோட்டை பயணிகள் ரயில் மோதி முதியவர் பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி, இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


