News November 13, 2025
எங்கு பார்த்தாலும் Content Creator-கள் தான்!

இந்தியாவில் தற்போது 14- 24 வயதுக்குட்பட்ட Gen Z தலைமுறையினரில் சுமார் 83% பேர் Content Creator-களாக மாறி இருக்கிறார்களாம். 93% பேர் தங்களுக்கு பிடித்த விஷயங்களை குறித்து தொடர்ந்து யூடியூப்பில் பார்த்து வருவதாகவும், 87% பேர் ஏதாவது ஒரு யூடியூப் பக்கத்தின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், 78% பேர், யூடியூப்பில் யாரோ ஒருவர் பேசுவதை கேட்டு கொண்டிருக்கிறார்களாம்.
Similar News
News November 13, 2025
டெல்லி சம்பவம்: ₹26 லட்சம் நிதி திரட்டிய டாக்டர்ஸ்

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில், அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த பயங்கரவாத சம்பவத்தில் தொடர்புடைய 4 டாக்டர்கள், வெடிபொருள் தயாரிப்பிற்காக ₹26 லட்சம் நிதி திரட்டி, டாக்டர் உமரிடம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News November 13, 2025
மேகதாது அணைக்கு அனுமதி வழங்கவில்லை: துரைமுருகன்

மேகதாது அணை கட்ட SC எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, கர்நாடகா தன்னிச்சையாக அறிக்கை தயாரித்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசிடம் கருத்து கேட்க வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியத்திற்கு SC உத்தரவிட்டிருந்தது.
News November 13, 2025
ரிலீசுக்கு முன்பே ₹325 கோடி ஈட்டிய ‘ஜனநாயகன்’

ரிலீசுக்கு முன்பே விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ கோடிகளை குவித்து வருகிறது. தமிழக திரையரங்க உரிமை ₹100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமைகள் ₹80 கோடிக்கும், ஆடியோ உரிமை ₹35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. மேலும் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ₹110 கோடிக்கு வாங்கியுள்ளது. இதுவரை படத்தின் மொத்த வருவாய் ₹325 கோடியை தாண்டியுள்ளது. பொங்கல் வின்னராக மாறுவாரா ‘ஜனநாயகன்’..?


