News February 9, 2025

ஊழியர்களை கண்டித்ததால் மேலாளர் அடித்து கொலை

image

மணலி புதுநகரில் 4 நாட்கள் வேலைக்கு வராததால், ஊழியர்களை மேலாளர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் மேலாளரை சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டெய்னர் பெட்டக மேலாளரான சாய் பிரசாத்தை, மது போதையில் சுத்தியால் தாக்கிவிட்டு 2 இளைஞர்கள் தப்பி ஒட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 22, 2025

விநாயகர் சதுர்த்தி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

image

விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், ‘சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. சிலை பாதுகாப்புக்கு 24 மணி நேரம் காவல் வைக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கு மேல் சிலை வைக்க கூடாது. பட்டாசு வெடிக்க கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது

News August 22, 2025

சென்னை: ITI, டிப்ளமோ போதும், சூப்பர் வேலை!

image

சென்னை, ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கீழ் எஞ்சின் தொழிற்சாலையில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ITI, டிப்ளமோ & இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.18,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணல் செபடம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News August 22, 2025

சென்னை கலெக்டர் அறிவிப்பு

image

சென்னை மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் சமூகப்பணி உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு உளவியல், சட்டம், சமூகவியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்களை dsdcpimms.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து செப்.15 -க்குள் குழந்தைகள் நலத்துறை இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்‌ என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!