News April 10, 2024

ஊழலை பற்றி பேச பாஜகவுக்கு தகுதியில்லை

image

பாஜக மறுமுறை ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டமே இருக்காது என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். ஊழலைப் பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறிய அவர், பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகள் என்று வழக்கு போடப்பட்ட 25 நபர்கள் பாஜகவின் வாஷிங் மெஷின் திட்டத்தால் சுத்தமாகி விட்டனர். பாஜக அரசால் மக்கள் அவதியில் உள்ளதாகவும் விமர்சித்தார்.

Similar News

News February 7, 2026

அக்னி 3 சோதனை வெற்றி.. இந்தியா சாதனை

image

ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் அக்னி 3 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சுமார் 3,500 கி.மீ தொலை தூர இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இது இந்திய வான்வழி பாதுகாப்புக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கு ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News February 7, 2026

பிப்ரவரி 7: வரலாற்றில் இன்று

image

*1864-மறைந்த மெட்ராஸ் மாகாண நீதிபதி சிவசுவாமி பிறந்தநாள் *1902–தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் *1979–நெப்டியூனின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது புளூட்டோ *1986–அரசியல்வாதி ஏ.ஜி.சுப்புராமன் நினைவு நாள் *1992–ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்து *2001–எழுத்தாளர் பகீரதன் நினைவு நாள் *2008–நடிகர் குணால் நினைவு நாள்

News February 7, 2026

பள்ளிக் காதலை நினைவூட்டும் With Love

image

திருமணத்திற்கு தயாராகும் அபிஷன், அனஸ்வரா தங்களது முதல் காதலை உரியவர்களிடம் சொல்லிவிட்டு வாழ்க்கையை தொடங்க திட்டமிடுகின்றனர். இந்த பயணத்தில் இருவரும் உணர்ந்துகொள்ளும் விஷயங்களே With Love.
பிளஸ்: அறிமுக படத்திலேயே அபிஷன் கலக்கல், கலகலப்பான 2-ம் பாதி, நாஸ்டால்ஜிக் பள்ளிக் காதல், ஷான் ரோல்டனின் பாடல்கள் பல்ப்ஸ்: ஸ்லோவான முதல் பாதி, பழகிப்போன காதல் காட்சிகள், யூகிக்கக்கூடிய கதைக்களம் Rating: 2.5/5

error: Content is protected !!