News February 2, 2025

ஊர்வலம்: அதிமுகவினருக்கு அழைப்பு

image

அண்ணா நினைவுநாளை முன்னிட்டு, சேலம் தெற்கு எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலம் நாளை (பிப்.03) காலை 9.30 மணியளவில் நடக்கிறது. இந்த ஊர்வலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலையைச் சென்றடைகிறது. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஊர்வலத்தில் அதிமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என அதிமுக மாநகர், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டறிக்கை.

Similar News

News March 4, 2026

சேலம்: டிகிரி போதும்., ரூ.58,514 சம்பளத்தில் வங்கி வேலை!

image

சேலம் மக்களே, RBI வங்கியில் காலியாக உள்ள 650 Assistant பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 8ம் தேதிக்குள் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவரும் தெர்ஞ்சுக்க SHARE செய்து உதவுங்க.

News March 4, 2026

சேலத்தில் திமுக-வில் கூண்டோடு இணைந்தனர்

image

அதிமுக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழகத்தில் பெரும் பேசும் பொருளான நிலையில், பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சேலம் மாநகர மாவட்ட ஓபிஎஸ் அணி செயலாளர் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

News March 4, 2026

கன்னங்குறிச்சி அருகே இளம்பெண் விபரீத முடிவு!

image

சேலம் சின்ன திருப்பதி சந்திரன் கார்டன் பகுதியைச் சேர்ந்த மணியின் மகள் தேவிகா (20). இவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கன்னங்குறிச்சி போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் சரியாக வேலை செய்யாததால் தந்தை மணி அவரைத் திட்டியதாகவும், இதனால் மனமுடைந்த தேவிகா விபரீத முடிவை எடுத்ததும் தெரியவந்தது. போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!