News July 5, 2025
ஊர்க்காவல் படையில் வேலை

சமூக சேவகர்கள், ஆசிரியர்கள், உயர் பதவி வகிப்பவர்கள், சுயதொழில் புரிபவர்கள், உயர் தகுதி வாய்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் பொது நல தொண்டில் ஈடுபாடு கொண்ட சேவை செய்ய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை பெருநகர ஊர்காவல்படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை – 15 என்ற முகவரிக்கு உங்கள் சுயவிவரத்தை தபால் அனுப்பலாம்.
Similar News
News July 5, 2025
சென்னையில் இனிமேல் ஈசியா புகார் அளிக்கலாம்

சென்னை மெட்ரோபொலிட்டன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) பொதுமக்கள் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க, புதிய Grievance Redressal System அமைத்துள்ளது. குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பிரச்சனைகளை தெரிவிக்க 044-4567 4567 (20 லைன்கள்) என்ற எண்ணிலும், இலவச தொலைபேசி எண் 1916 மூலமாகவும் புகார் அளிக்கலாம். மேலும் QR கோடு ஸ்கேன் செய்தும் புகார் பதிவு செய்யலாம்.
News July 5, 2025
சென்னை முழுவதும் உற்பத்தி செய்பவர்களுக்கு உதவித் தொகை

சென்னை முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 6, 135 உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக ரூ.122.7 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண் உற்பத்தியாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
News July 5, 2025
சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்றும் (ஜூலை 5) அதே விலையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.