News May 10, 2024

ஊராட்சி மன்ற தலைவர் இயற்கை எய்தினார்

image

இராணிப்பேட்டை மாவட்ட திமுக பிரதிநிதி சீனிவாசன் என்பவரின் தந்தையும் தென்கடப்பதாங்கல் ஊராட்சி மன்ற தலைவருமான  பிச்சமணி இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஆர். காந்தி அவர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

Similar News

News July 8, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜூலை 07)இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News July 7, 2025

வெற்றி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் இன்று (ஜூலை-7) வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, லாட்டரி மற்றும் வெற்றி அழைப்புகள் (Prize Winning Call) போன்றவற்றை உண்மை என நம்பி பணம் கொடுக்கும் மக்கள் மோசடிக்கு ஆளாகக்கூடும். இந்த வகை கைபேசி அழைப்புகள் மூலம் பணம் வற்புறுத்தும் மோசடி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சைபர் மோசடியில் சிக்காதீர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

News July 7, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா, மாற்றுத்திறனாளிகள் வழங்கிய மனுக்களை பெற்று அவர்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். மனுக்களில் கூறப்பட்ட பிரச்னைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

error: Content is protected !!