News June 7, 2024
ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

கொள்ளிடம், ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள அமிர்த குளக்கரையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு துவங்கி வைத்தார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கவிதா, ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
Similar News
News September 14, 2025
மயிலாடுதுறை 16.09.2025 தேதியை குறித்து வச்சிக்கோங்க!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து தற்போது காணலாம்!
⏩மயிலாடுதுறை
✅பால லட்சுமி திருமண மண்டபம், திருமஞ்சன வீதி,
⏩சீர்காழி நகராட்சி
✅நாடார் உறவின் முறை திருமண மண்டபம்,
⏩செம்பனார்கோயில்
✅தனச் செல்வி திருமண மண்டபம், திருவிளையாட்டம்
⏩கொள்ளிடம் வட்டாரம்
✅ ஜம் ஜம் மஹால், ஆனைகாரன்சத்திரம்,
SHARE பண்ணுங்க!
News September 14, 2025
சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

செம்பனார்கோயில், ஆறுபாதி விளநகரை சேர்ந்த அன்பரசன் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் கவுடு என்ற செல்வகுமார் (26) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் இந்நிலையில் இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதாலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைத்தனர்
News September 13, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரங்கள் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீஸார் விவரங்கள் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, சீர்காழி, ஆணைக்காரன் சத்திரம், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.