News December 19, 2025
ஊராட்சி இணைப்பு குறித்து கருத்து தெரிவிக்கலாம் – ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்த பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கொண்டுள்ள பாலமோர் ஊராட்சியை சுருளகோடு ஊராட்சியுடன் இணைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி, மறுசீரமைப்பு தொடர்பாக கருத்துக்கள் இருப்பின் டிச.27ம் தேதிக்குள் கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் கருத்து தெரிவிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (டிச.19) தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
குமரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 23, 2025
குமரி: இனி உங்க PAN CARD செல்லாது?

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News December 23, 2025
குமரி: பொதுத்தேர்வுகளுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பக்கலாம்

குமரி ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு; மார்ச் ஏப்ரல் 2026, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள்: நேற்றுமுதல் 07/01/2026 வரையிலான நாட்களில் ( அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.


