News March 19, 2024
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணியிட மாற்றம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு பணிப்பார்வையாளர் , இளநிலை வரை தொழில் அலுவலர் நிலையிலான 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கயல்விழி ஆத்தூருக்கும் , கீதாலட்சுமி தலைவாசலுக்கும் பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 31, 2026
சேலம்: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 31, 2026
தாரமங்கலம் அருகே நேர்ந்த சோகம்!

தாரமங்கலம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மகாதேவன் (43), வீடு கட்டுவதற்காகப் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், மாநில அரசின் ‘104’ உதவி எண் அல்லது ‘044-24640050’ தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
News January 31, 2026
ஆத்தூர் அருகே பயங்கரம்: இளைஞர் பலி!

ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் தாமோதரன் (34). இவர் கடந்த 28-ஆம் தேதி கொத்தம்பாடியிலிருந்து ஆத்தூருக்கு டூவீலரில் சென்றார். அப்போது சாலையோரம் நின்றிருந்த காரின் கதவை திடீரென திறந்தபோது, டூவீலர் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாமோதரன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


